கோட்டாபயவிடம் இருந்து சஜித்துக்கு அதிர்ச்சி தகவல்!

0
855

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறிமதாச அனுப்பிய கடிதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் பதவியை பொறுப்பேற்க தயாராக இருப்பதாகவும், நாளைய தினம் புதிய அரசாங்கத்தை அமைத்து சத்தியப்பிரமாணம் செய்ய சந்தர்ப்பம் வழங்குமாறும் எதிர்கட்சி கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி கோட்டாபயவுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி செயலகத்தினால் எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேசமயம் முன்னதாக எதிர்க்கட்சித் தலைவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்திருந்த ஜனாதிபதி பிரதமர் பதவியை பொறுப்பேற்கும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதனை சஜித் நிராகரித்திருந்தார்.

இதன் காரணமாக ஜனாதிபதி அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள கோரிக்கையை தற்போதைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை ரணில் விக்கிரமசிங்க இன்றுமாலை பதவிப்பிரமாணம் செய்யதார்.