டி20 கிரிக்கெட்டில் 4000 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்த ரிஷாப் பண்ட்!

0
470

டெல்லி கேப்பிடல்ஸ் அணித்தலைவர் ரிஷாப் பண்ட் டி20 கிரிக்கெட்டில் 4000 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

நேற்றைய போட்டியில் ரிஷாப் பண்ட் 4 பந்துகளில் 13 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அவர் டி20 போட்டிகளில் 4,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார்.

விக்கெட் கீப்பர் பேட்டராக இருந்து இந்த சாதனையை செய்திருக்கும் 4வது இந்திய வீரர் பண்ட் ஆவார். இந்த பட்டியலில் தோனி 7,098 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

டி20-யில் 4000 ஓட்டங்கள் கடந்த இந்திய விக்கெட் கீப்பர்கள்:

  1. தோனி (7098) 
  2. தினேஷ் கார்த்திக் (6557)
  3. பார்த்திவ் பட்டேல் (4300)
  4. ரிஷாப் பண்ட் (4000)