புதிய பிரதமருக்கு ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!

0
119

இலங்கையை மீண்டும் பலப்படுத்துவதற்காக புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது வாழ்த்தில், ‘மிகவும் கொந்தளிப்பான நேரத்தில் எமது நாட்டை வழிநடத்தும் சவாலான பணியை முன்னெடுத்துச் சென்ற புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) எனது நல்வாழ்த்துக்கள்.

இலங்கையை மீண்டும் வலிமையாக்க அவருடன் இணைந்து பணியாற்ற நான் எதிர் பார்த்துள்ளேன்’ என ஜனாதிபதி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.