யாழ் எரிபொருள் நிலையத்தில் பொலிஸ் அதிகாரி அடாவடி!

0
752

யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுர வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் அடாவடியால் எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டதாக தெரியவருகின்றது.

நேற்றைய தினம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதியம் முதல் பெற்றோல் முடிவடைந்து விட்டதாக ஊழியர்கள் கூறிய போதிலும் ஒரு சிலருக்கு பெற்றோல் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து , அங்கு கூடிய சில தமக்கும் பெற்றோல் தருமாறு கோரிய போது, யாழ்.போதனா வைத்திசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாத்திரமே வழங்குகின்றோம் எனக் ஊழியர்கள் கூறியுள்ளனர்.

அதன் போது, அங்கு நின்று இருந்த சிலர் ஒரு வைத்திய சாலை ஊழியர் ஐந்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்து பெற்றோல் அடித்து செல்வதனை எவ்வாறு அனுமதிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் அங்கு இரு மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸாருக்கு பெற்றோல் வழங்க ஊழியர்கள் தயாராகிய போது , அங்கிருந்தவர்கள் முரண்பட்டுள்ளனர்.

அதன் போது இரு பொலிஸார் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து சென்ற போதிலும் , ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் தனக்கு பெற்றோல் அடிக்க வேண்டும் என கண்டிப்பான குரலில் கூறினார்.

அங்கிருந்தவர்களின் குழப்ப நிலைமை காரணமாக ஊழியர்கள் அதற்கு தயங்கிய போது குறித்த உத்தியோகஸ்தர் “எனக்கு அடிக்க முடியாத பெற்றோல் இங்கே யாருக்கும் அடிக்க கூடாது” என கோபத்துடன் கூறி அங்கிருந்து சென்றதாக கூறப்படுகின்றது.

எரிபொருளுக்காக பொதுமக்கள் நீண்டநேரமாக காத்திருக்க பொலிஸ் உத்தியோகத்தரின் இந்த அடாவடிச்செயல் குறித்து அங்கிருந்தவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Gallery

Gallery

Gallery