போராட்டகாரர்களிடம் அடிவாங்கிய DIGன் நிலை என்ன?

0
569

மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது நேற்று போராட்டகாரகளால் தாக்குதல் நடத்தப்பட்டது.

அலரி மாளிகை நோக்கி செல்லும் குறித்த பாதை ஊடாக சிவில் உடைல், பயணித்த தேசபந்து தென்னகோனை, அங்கிருந்த பொதுமக்கள் தடுத்து அவரை வாகனத்திலிருந்து இறக்கி, தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மைனாகோ கம, கோட்டா கோ கம அமைதி ஆர்ப்பாட்டக் காரர்கள் மீதான காட்டு மிராண்டித் தனமான தாக்குதல்களை கண்மூடி வேடிக்கை பார்த்ததாகவும், அத்தாக்குதலுக்கு உதவியதாகவும் குறறம் சாட்டி பொதுமக்கள் அவர்மீது தாக்குதலை நடத்தினர்.

கைகள், தலைக் கவசம் மற்றும் தடி கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவரின் வாகனத்துக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். இந்த தாக்குதல் நடத்தப்படும்போது, தேசபந்து தென்னகோனை காப்பாற்ற வானை நோக்கி   துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்   அவரை , பாதுகாப்பான இரகசிய இடமொன்றுக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வருகிறது.

பொலிஸ் வைத்தியசாலை அல்லது, வேறு வைத்தியசாலைக்கு செல்வதை அவர் அச்சம் காரணமாக தவிர்த்துள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன், பொலிஸ் வைத்தியசாலையிலிருந்து வைத்தியர் தாதியரை அழைத்து காயத்துக்கு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அறிய முடிகிறது.

அதேசமயம் தலையில் ஏற்பட்ட காயத்துக்கு 5 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், தாக்குதலால் தேசபந்து தென்னகோனின் முகமும் வீக்கமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ , சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கூறின

இதேவேளை தாக்குதல் தொடர்பில் கைதான இரு இளைஞர்கள் இன்று (11) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நாளை வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது