சர்வதேச நாணய நிதியத்தின் புதிய செய்தி!

0
679

இலங்கையில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் போது கொள்கை கலந்துரையாடல்களுக்கு தயாராகும் வகையில், இலங்கை அதிகாரிகளுடன் தொழில்நுட்ப மட்ட கலந்துரையாடல்களை தொடரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் இன்று அறிவித்துள்ளது.

திட்டமிட்டப்படி, 2022, மே 9ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மெய்நிகர் சந்திப்புக்கள் மற்றும் தொழில்நுட்ப மட்டத்தில் விவாதங்கள் தொடர்கின்றன.

இதன் அடிப்படையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் கொள்கை விவாதங்களுக்கு முழுமையாக தயாராக வேண்டும் என்று என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

தமது நிதியம் இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சமூக பதற்றங்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

தமது நிதியக் கொள்கைகளுக்கு இணங்க இலங்கைக்கு உதவ தாம் கடமைப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

முன்னதாக பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது ஆட்சி மாறும்வரை தமது செயற்பாடுகளை சர்வதேச நாணய நிதியம் ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.