மஹிந்த அலுவலகத்தின் மீது கல்வீச்சு!

0
437

மட்டக்களப்பு காத்தான்குடியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இந்த கல்வீசித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி முகைதீன் மெத்தை ஜும்ஆப்பள்ளி வாசல் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தின் மீதேஎ இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் அலுவலகத்தின் முன் கண்ணாடி உடைந்துள்ளதுடன் பதாதைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவத்தையடுத்து அங்கு சென்ற காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது. 

Gallery

Gallery