பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கும் மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

0
126

தற்போதைய வன்முறைச் சூழல் தொடர்ந்தால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இது ஏற்கனவே ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையை மோசமாக்கும் என்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்குமாறு சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் கலாநிதி பிரசாத் கொலம்பகே பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகாமையிலும் காலி முகத்திடலில் நிராயுதபாணிகளான பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தமது சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.