நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்த கோரிக்கை

0
518

நாட்டு மக்கள் அமைதியாக இருக்குமாறு தனது ட்விட்டர் பதிவின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அரசியல் பேதமின்றி மக்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பழிவாங்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.