நீர்கொழும்பில் பதற்ற நிலை… வன்முறை வெடிப்பு

0
399

நீர்கொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு தீன் சந்தியிலும் சில கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. வன்முறை சம்பவங்கள் அதிகரிதுள்ள நிலையில் அந்தப் பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இன, மத குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் குழுவொன்றினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நேற்றைய தினம் குறித்த பிரதேசத்தில் அரசியல்வாதிக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக இன்று இந்த வன்முறை கட்டவிழ்த்தப்பட்டுள்ளது.