உடைத்தெறியப்பட்ட ராஜபக்ச தந்தையின் சிலை!

0
378

 இலங்கையில் ராஜபக்ச சகோதர்களின் தந்தை டான் ஆல்வின் சிலையை பொதுமக்கள் உடைத்தெறிந்துள்ளனர்.

தங்காலை நகரில் உள்ள டான் ஆல்வின் சிலையை பொதுமக்கள் உடைத்து நொறுக்கியுள்ளனர்.

 கொழும்பில் நேற்று அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் அமைதியாக போராடி வந்தவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.

கொழும்பு சம்பவத்தால் கடும் கோபமடைந்த பொதுமக்கள், இன்று தங்காலை நகரில் உள்ள டான் ஆல்வின் சிலையை உடைத்து கீழே தள்ளியுள்ளனர்.

முன்னதாக நேற்று இலங்கையில் பல்வேறு இடங்களில், குறிப்பாக மகிந்த குடும்ப வீடு உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசியல்வாதிகள் பலரின் வீடுகள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.