ஊரடங்கு நேரம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

0
955

இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை புதன்கிழமை (10-05-2022) காலை 7 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இலங்கையில் அண்மைக்காலமாக வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.

ராஜபக்ஷ குடும்பத்தினர் தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் 3 வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், (Gotabaya Rajapaksa) முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் (Mahinda Rajapaksa) பதவி விலகக்கோரி ஒரு மாதமாக தெருமுனை ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. 

தொடர் ஆர்ப்பாட்டங்களின் எதிரொலியால் அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்ட பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்த மஹிந்த ராஜபக்ஷ, நேற்று தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இதற்கிடையே, இலங்கையின் குருங்கலாவில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வீட்டின்மீது போராட்டக்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தி தீ வைத்தனர்.  

ஆளுங்கட்சியினரின் வீடுகளுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இலங்கையில் மறு உத்தரவு வரும் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்படுவதாக இலங்கை ரயில்வே அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், இலங்கையில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் தற்போது அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை நாளை (11.05.2022) காலை 7 மணி வரை நீட்டிப்பு செய்து அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.