நாட்டில் வன்முறைகளினால் ஏற்பட்ட சேத விபரங்கள்

0
583

இலங்கை முழுவதும் இன்று காலை 6 மணி வரை இடம்பெற்ற கலகம் மற்றும் வன்முறை செயற்பாடுகளில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 220 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 47 வாகனங்கள் மற்றும் 38 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளதுடன், 41 வாகனங்களும் 65 வீடுகளும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மேல் மாகாணம் –  ஆறு பேரும், தென் மாகாணத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேல் மாகாணத்தில் 29 வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவங்களும், 08 வீடுகளுக்கு தீ வைத்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

அத்துடன் வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்திய 15 சம்பவங்களும் வீடுகளுக்கு சேதமேற்படுத்திய 23 சம்பவங்களும் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளன.

நாடளாவிய ரீதியில் வன்முறைகளினால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகின (PHOTOS)

தென் மாகாணம் –  07 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதுடன், ஐந்து வானங்களுக்கும் 09 வீடுகளுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஸ்ரீலங்கா பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

நாடளாவிய ரீதியில் வன்முறைகளினால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகின (PHOTOS)

மத்திய மாகாணம் – நான்கு வாகனங்களுக்கும் 06 வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதுடன், 05 வீடுகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணம் –  09 வாகனங்களுக்கும் 08 வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ள அதேவேளை இரண்டு வாகனங்களுக்கும் 07 வீடுகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

வட மத்திய மாகாணம் –  03 வாகனங்களுக்கும் 04 வீடுகளுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்ட அதேவேளை கிழக்கு மாகாணத்தில் 03 வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் வன்முறைகளினால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகின (PHOTOS)

வட மேல் மாகாணம் –  05 வாகனங்களும் 09 வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதுடன், 13 வாகனங்களுக்கும் 15 வீடுகளுக்கும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

ஊவா மாகாணம் –  இரண்டு வீடுகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்ட போதிலும் வட மாகாணத்தில் மாத்திரம் எந்தவொரு வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery