ஊடரங்குச் சட்டம் மேலும் நீடிப்பு!!

0
196

இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் 3 வாரங்களுக்கு மேலாக மக்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை கடந்த இரு தினங்களாக போராட்டம் தீவிரமடைந்து காணப்படுவதுடன், நேற்றைய தினம் 32 க்கும் மேற்ப்பட்ட முக்கியஸ்தர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்நிலையில், நாடளாவிய ரீதியில் புதன்கிழமை காலை 7.00 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் குறித்த ஊரடங்கு சட்டத்தை வியாழக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் வியாழன் 12 ஆம் திகதி காலை 7.00 மணி வரை தொடரும்.