கொழும்பில் வெடித்தது கலவரம்! அதிரடிப்படையினருடன் பொலிஸாரும் குவிப்பு!

0
69

 அலரி மாளிகை முன்பு பதற்ற நிலையை கட்டுப்படுத்த பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பதற்றம் இன்னும் அதிரித்துள்ளது.

 அரசாங்க ஆதரவாளர்களினால், அரசாங்கத்தை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் கூடாரங்கள் உடைத்து எறியப்படுவதாகவும் கூறப்படுகின்றது. 

அத்துடன் சம்பவ இடங்களில் செய்தி சேகரிக்கும் மற்றும் காணொளி பதிவு செய்யும் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதாக தெரியவருகிறது.

குறித்த பகுதியில் அமைதியான முறையில் ஆர்பாட்டங்களை முன்னெடுத்து வந்தவர்கள் மீது, ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டமையை தொடர்ந்து இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலைமையினை வழமைக்கு கொண்டுவருதற்கு பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.