சமையல் எரிவாயுவுக்காக காத்திருக்கும் மக்கள்!

0
93

வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு கையிருப்பு இல்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

சமையல் எரிவாயுவுக்காக வரிசைகளில் நிற்கும் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் லிட்ரோ நிறுவன தலைவர் ஊடகங்களுக்கு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

வீட்டு உபயோகத்துக்கான எல்பி எரிவாயு கையிருப்பு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சாலை நோக்கங்களுக்காக மாத்திரமே எரிவாயு வெளியிடப்படும். எனவே பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம்.

இதேவேளை எல்பி எரிவாயு இறக்குமதிக்காக 07 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இன்று செலுத்தப்படும். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு கப்பல்கள் இலங்கை வந்தடையும் என தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.