ஊரடங்கிற்கு மத்தியில் கொழும்பில் பெருந்திரளான மக்கள்

0
600

கொழும்பின் பல பகுதிகளில் மக்கள் மண்ணெண்ணெய்க்காக வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்க முடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை முதல் கொழும்பின் பல பகுதிகளில் பதற்ற நிலை நிலவி வருகிறது. 

இதனையடுத்து நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

என்ற போதும் தமக்குரிய அத்தியாவசிய பொருட்கள் இல்லாத நிலையில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

அதன்படி எரிவாயு, மண்ணெண்ணெய், பெற்றோல், டீசல் கிடைக்காமல் ஒவ்வொரு நாளும் பலர் வீடுகளுக்கு ஏமாற்றத்துடன் திரும்பி வருவதை அறியமுடிகிறது.

Gallery

இந்த நிலையில் இன்று பிற்பகல் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட போதும் கூட மக்கள் தமது தேவைகளுக்காக தொடர்ந்தும் வீதிகளில் காத்திருக்கும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. 

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுயிலுள்ள எரிபொருள் நிலையமொன்றிலும், மின்சாரம் இல்லாத நிலையிலும் கூட மழைக்கு மத்தியில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக மக்கள் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

Gallery