அரிசியின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டலாம்

0
646

நாட்டில் இரசாயன உரங்கள் உள்ளிட்ட விவசாய பொருட்களின் விலை வேகமாக அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் அரிசியின் விலை மேலும் அதிகரிக்கப்பட்ட உள்ளதாக உர இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கடனுதவி கிடைக்காமையால் எதிர்வரும் பருவத்திற்கு தேவையான இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் தற்போது கிடைக்கும் உரத்தினளவு எதிர்வரும் விவசாயப் பருவத்தில் பயிர் செய்வதற்கு போதுமானதாக இல்லை என உர இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுஜிவ வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியால் உரத்தின் விலையும் விவசாய சமூகத்தின் விலைக்கு எட்டாத அளவிற்கு அதிகரித்துள்ளது என்றார்.

இதேவேளை, அடுத்த பருவத்துக்கான சேதன உர விநியோகம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்திய கடனுதவியின் கீழ் அடுத்த பருவத்திற்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.