மலேசிய பெண்ணை ஏமாற்றிய தமிழக இளைஞர்

0
891

மலேசியா பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய நெல்லை இளைஞரை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளார்.

மலேசியா நாட்டை சேர்ந்த பொறியியல் பட்டதாரியானவர் கவிதா. இவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இம்ரான் என்பவருடன் சமூக வலைத்தளம் மூலம் நட்பு ஏற்படு நண்பர்களாகியுள்ளனர்.

அப்போது இம்ரான் துபாய் வேலை பார்த்து வந்த இவர்களின் நட்பு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்போன் மூலம் பேசிக்கொண்டு வந்துள்ளனர்.

இதனிடையே கவிதா திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டு கேட்க, அதற்கு இம்ரான் தமிழகம் வர சொல்லி இருக்கிறார். உடனே காதலனுக்காக, குடும்பத்தினருடன் மலேசியாவில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டு வந்திருக்கிறார், கவிதா. பின்னர், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஒரு கோவிலில் கவிதா மற்றும் இம்ரானுக்கு திருமணமும் நடந்து முடிந்தது.

ஆனால், திருமணம் முடிந்த சில நாட்களில் கவிதாவும் அவரது குடும்பத்தினரும் இம்ரானை அழைத்துக் கொண்டு மலேசியா சென்றுள்ளனர். தொடர்ந்து, அங்கிருந்து இம்ரான் சில நாட்களில் தனது பணி காரணமாக துபாய் செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

துபாய் செல்லும் முன் கவிதாவிடம் 15 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, பணிக்கு துபாய்க்கு சென்ற இம்ரான் தனது மனைவியிடம் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்திருக்கிறார்.

அதிரடி கைது

இதனால் பல முறை கவிதா கேட்கும்போது மலேசியாவிலிருந்து திருநெல்வேலி வர சொல்லியும், அப்படி வந்தால் மட்டுமே தொடர்ந்து குடும்பம் நடத்த முடியும் என கூறியுள்ளார்.

கர்ப்பமாக இருந்த கவிதா இம்ரான் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையிலும் அவர் வழக்கறிஞர்கள் உதவியுடன் தப்பித்து வந்துள்ளார்.

பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த நிலையில், புகாரின் பேரில் இம்ரான் விசாரணைக்கு அழைத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குற்றம் உறுதியான நிலையில், கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.