யாழில் கடலில் மூழ்கி ஒருவர் பலி

0
167

யாழ்ப்பாணம் – சாட்டி கடற்கரையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கில் இருந்து நண்பர்களுடன் குளிக்க சென்ற நபர் 46 வயதான ஒருவரே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.