குத்துச்சண்டை போட்டியில் நம்பர் ஒன் வீரர் தோல்வி!

0
378

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில், உலகின் நம்பர் ஒன் வீரராக கருதப்படும் கனேலோ அல்வாரெஸ் (Canelo Alvarez) அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

79 கிலோ எடை பிரிவில் நடைபெற்ற லைட் ஹெவிவெயிட் போட்டியில் மெக்சிகோவின் கனேலோ அல்வாரெஸ்(Canelo Alvarez), நடப்பு சாம்பியனான ரஷ்யாவின் டிமிட்ரி பிவோலை(Dmitry Pivola), எதிர்த்து விளையாடினார்.

Gallery

அல்வாரெஸ் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரின் தாக்குதல்களை நேர்த்தியாகத் தடுத்த டிமிட்ரி பிவோல் (Dmitry Pivola), 115 க்கு 113 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் பிளாயிட் மேவெதரிடம் (Floyd Mayweather)தோல்வி அடைந்த அல்வாரெஸ், தற்போது 2வது முறையாக தோல்வியை சந்தித்துள்ளார்.

Gallery