சட்டமியற்றுபவர்கள் குறித்து குற்றம் சாட்டிய மகாநாயக்க தேரர்கள்!

0
619

சர்வகட்சி பொது இடைக்கால நிர்வாகத்தை உருவாக்குவதற்கு முயற்சி எடுக்குமாறு அரச தலைவர், பிரதமர் உட்பட அனைத்து சட்டமியற்றுபவர்களுக்கும் சியாம், அமரபுர மற்றும் ராமன்ன நிகாயா பிரிவுகளின் மகாநாயக்க தேரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இரண்டு பக்க அறிக்கையொன்றில், இலங்கை மக்களைப் பாதித்துள்ள சமூக-பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளில் தலையிட்டு தீர்வு காண நாடாளுமன்றத்தில் உள்ள சட்டமியற்றுபவர்கள் தவறியமை குறித்து மகாநாயக்க தேரர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

மக்கள் நெருக்கடியில் உள்ள நேரத்தில், நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் தங்கள் அரசியல் கட்சிகளின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக மட்டுமே பொது நிதியை வீணடித்து வருவதாகவும், எனவே மக்கள் ஆணையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு நம்பகத்தன்மையை அவர்கள் கொண்டிருக்கிறார்களா என்பது கவலைக்குரியது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

குறுகிய அரசியல் இலாபத்தை அடைவதற்காக சில மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் அவர்களின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையை சித்தரிப்பதாகவும், அவர்கள் இன்றைய பிரச்சினைகளுக்கு எந்த உணர்வும் இல்லை என்றும் கூறியுள்ளனர்