கடவுச்சீட்டு தொடர்பில் வெளியாகிய முக்கிய அறிவிப்பு!

0
27

கணனி அமைப்பில் ஏற்பட்டுள்ள அவசர திருத்தப்பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் பணி எதிர்வரும் திங்கட்கிழமை (9) முதல் வழமையான சேவையில் இருந்து ஆரம்பிக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மே 5, 6 மற்றும் 9ஆம் திகதிகளில் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள நேரத்தை ஒதுக்கிக்கொண்டவர்கள் மற்றும் மே 5ஆம் திகதி சாதாரண சேவையின் மூலம் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள விண்ணப்பபடிவங்களை கையளிக்க வந்து திணைக்களத்தினால் இலக்கம் ஒன்றை பெற்றுக்கொண்டவர்களின் விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், செவ்வாய்க்கிழமை, மே 10 முதல், கடவுச்சீட்டுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.