விரைவாக டொலரை பெற வழி சொல்லும் பொருளாதார நிபுணர்கள்!

0
22

நாட்டில் அந்நிய செலவாணியின் கையிருப்பு அடிமட்டத்தை எட்டியுள்ளதாக நிதியமைச்சர் அலி சப்ரி அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நெருக்கடியை சமாளிக்கக் கூடிய வகையில் டொலரினை பெற்றுக்கொள்ள பொருளாதார நிபுணர்கள் வழிமுறைகளை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தி வருகின்றனர்.

அதற்கமைய நாட்டில் ஏற்கனவே பதிவு செய்யப்படாத வாகனங்களை மீள் ஏற்றுமதி செய்வதன் மூலம் விரைவாக அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதித்துள்ள போதிலும், 2021ஆம் ஆண்டு இறுதிவரை பல்வேறு வழிகளில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வாகனங்களை மீள் ஏற்றுமதி செய்வதற்கு அரசாங்கம் விசேட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யக் கூட, அந்நிய செலவாணி கையிருப்பில் இல்லாத நிலையில், இவ்வாறான மாற்று நடவடிக்கைகள் மூலம் மாத்திரமே டொலரினை பெற்றுக்கொள்ள முடியும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.