அவசர கால சட்டம் குறித்து கண்டனம் தெரிவித்த அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்!

0
441

நேற்று(6 ) அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலை குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

தனது டுவிட்டர் செய்தியில் பதிவு ஒன்றை விடுத்தே குறித்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

மற்றொரு அவசர நிலை குறித்து அமெரிக்கா கவலையடைந்துள்ளது.

அமைதியான குடிமக்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும் மற்றும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் உண்மையான சவால்களுக்கு நாட்டை மீண்டும் செழிப்புக்கான பாதையில் கொண்டு வர நீண்ட கால தீர்வுகள் தேவை. அவசர நிலை அதற்கு உதவாது என்றும் தெரிவித்துள்ளார்.