சர்வதேச நாணய நிதியத்துடன் இணையவழி பேச்சுவார்த்தை!

0
354

சர்வதேச நாணய நிதிய குழு, இலங்கை குழுவுடன் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிவரை இணையவழி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

இலங்கை தொடர்பான தமது புதுப்பிக்கப்பட்ட அறிவித்தலை வெளியிட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பிரதானி மசாயிரோ நொஸாகி இதனை அறிவித்துள்ளார்.

அதன்படி சர்வதேச நாணய நிதியம், தமது கொள்கை எல்லைக்குள், இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.