அவசரகாலச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் வெளியிடப்பட்ட அறிவித்தல்

0
209

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சமூக ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவுமே அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை தொடர்பில் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி. குறுகிய கால மற்றும் நீண்ட கால விளைவுகளுடன் கூடிய பல காரணிகளின் விளைவாக ஒட்டுமொத்தமாக சுதந்திரத்தின் பின்னர் இலங்கை தற்போது மோசமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரமின்மையை எதிர்கொண்டுள்ளது.

இதை முறியடிக்க, நமது அரசியல், பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பில் தொடர்ச்சியான ஆழமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.