” பதவி விலக வேண்டாம் ” பிரதமருக்கு கடும் அழுத்தம்!

0
64

பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்ச ஆதரவாளர்கள் கடும் அழுத்தங்களை கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதவியில் இருந்து விலகாது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தில் பிரதமரை தீர்மானிக்க இடமளிக்குமாறும் அவர்கள் மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தின் போது பிரதமரை பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்ததாக தகவல்கள் வெளியானது.

எனினும் பிரதமர் ஊடக செயலாளர் அப்படியான கோரிக்கை விடுப்படவில்லை என்பதை பிரதமர் உறுதிப்படுத்தியதாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே கௌரவமாக பதவியில் இருந்து விலகி ஓய்வுபெறுவதற்காக பிரதமருக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள காகங்களின் கூட்டம் தடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.