பொலிஸாரின் அராஜகம்: தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்!

0
43

  அம்பாறை பாலமுனை பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அசம்பாவிதத்தினை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் Saheers Khan Farook, தாக்குதலுக்குள்ளகியுள்ளார்.

இதன்போது ஒரு குழுவினரின் தாக்குதலுக்கு உள்ளானமையினால் தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அதேசமயம் குறித்த ஊடகவியலாளரின் கமொர அக்குழுவினரால் பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அம்பாறை அட்டாளைச்சேனை , பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடு ஏற்பட்ட நிலையில் 16 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.