சபாநாயகரை சுற்றிவளைத்த எதிர்கட்சியினர்!

0
555

நாடாளுமன்றத்திற்கு வெளியே மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் சபாயகரை நாடாளுமன்றத்திற்கு வருமாறு எதிர்கட்சியினர் அழைப்பு விடுத்தனர்.

எனினும் சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு வருகைத்தராமல் அவரது அறையினுள் இருந்துள்ளார். இந்நிலையில் எதிர்கட்சியினர் சபாநாயகரின் அறைக்குள் சென்று சபாநாயகரை சுற்றிவளைத்து கேள்வி கேட்பதற்கு ஆரம்பித்துள்ளனர்.

நாடாமன்றத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியது குறித்து புகார் அளிக்க வந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் போது நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என அவர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தினர். இதேவேளை, நாடாளுமன்றம் எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.