நாடாளுமன்ற வாளகத்தினை நோக்கி பல்கலைக்கழக மாணவர்கள் இன்று போராட்டம்

0
516

நாடாளுமன்ற வாளகத்தினை நோக்கி அனைத்து பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்றலில் இருந்து தற்போது இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டு நாடாளுமன்ற வளாகத்தினை நோக்கி செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மொரட்டுவ மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மாணவ சங்கத்தினுடைய ஆர்ப்பாட்டப் பேரணி நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்து.

பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறி மாணவர்கள் நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி சென்றதனால் அங்கு பதற்றமான நிலை உருவாகியிருந்தது.

எனவே நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் இன்றும், நாளையும் நாடாளுமன்ற வீதிகள் தடைப்பட்டிருக்கும் என்று பொலிஸ் தலைமையகம் இன்று அறிவித்திருந்த நிலையில் தற்போது மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.