டொமினிக்கன் குடியரசில் விமான ஊழியர்களுக்கு சிறை

0
489

டொமினிக்கன் குடியரசில் இருந்து கனடா செல்லும் விமானம் ஒன்றில் சந்தேகத்துக்குரிய விதத்தில் இருந்த பார்சல் குறித்து அந்த விமான ஊழியர்கள் அந்நாட்டு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து, டொமினிக்கன் குடியரசிலுள்ள Punta Cana என்ற இடத்திலிருந்து கனடாவின் ரொரன்றோவிற்குப் புறப்பட இருந்த அந்த பார்சலை அந்நாட்டு அதிகாரிகள் சோதனையிட்டுள்ளார்கள்.

அதிர்ச்சியளிக்கும் விதமாக அந்த பார்சலுக்குள் 200 சிறு பொட்டலங்களில் கொக்கைன் என்னும் போதைப்பொருள் இருந்துள்ளது. உடனடியாக, டொமினிக்கன் குடியரசு அதிகாரிகள், அந்த விமான ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

அவர்களில் ஒருவர் இந்தியர், டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்தவர் ஒருவர் மற்றும் கனேடியர்கள் ஒன்பது பேர்.

இந்த சம்பவம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி நடந்துள்ளது.

24 நாட்களாக அந்த விமான ஊழியர்கள் மோசமாக நடத்தப்பட்டுள்ளார்கள், கொன்றுவிடுவோம் என மிரட்டப்பட்டிருக்கிறார்கள், அவர்களுக்கும் அந்த போதைப்பொருளுக்கும் தொடர்பு இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

தற்போது அந்த விமான ஊழியர்கள் ஜாமீனில் விடப்பட்டிருக்கும் நிலையில், அந்நாட்டு அதிகாரிகள் ஜாமீனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருக்கிறார்களாம்.

அப்படி ஜாமீன் ரத்து செய்யப்படும் நிலையில், அந்த விமான ஊழியர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்படலாம்.

ஆகவே, Pivot Airlines என்னும் அந்த விமான நிறுவன அதிகாரிகள், தங்கள் ஊழியர்களை மீட்குமாறு கனேடிய அரசுக்கு அவசர கோரிக்கை விடுத்துள்ளார்கள்.