எனக்கு தாருங்கள் நிரூபித்துக் காட்டுகின்றேன்; பசில்!

0
348

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவி தனக்கு வழங்கப்படுமாயின் நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை பலத்தை தன்னால் நிரூபிக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அவர் , மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னர், தனக்கு இதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு பசில் ராஜபக்ச, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கு கோட்டாபயவிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை என கூறப்படுகின்ற நிலையில் மீண்டும் இந்த கோரிக்கையினை பசில் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.