5வது அணியாக சென்னைக்கு வாய்ப்பு உள்ளதா?

0
121

ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டுக்கான தொடரில் புதிதாக இணைந்த லக்னோ மற்றும் குஜராத் அணிகள் யாரும் எதிர்ப்பாராத வகையில் வெற்றி குவித்து, முதல் இரு இடங்களை பிடித்து, ப்ளே ஆஃப் சுற்று வரை சென்றுள்ளது.

ஆனால், பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மும்பை மற்றும் சென்னை அணிகள் கடைசி இரு இடங்களை பிடித்து வெளியேறி இருக்கிறது. என்னதான் இந்த புதிய அணிகள் மேல வந்தாலும், அடுத்த இடத்தில் ராஜஸ்தான் அணி உள்ளது. 4வது இடம் பிடிக்க போட்டியாக 4 அணிகள் போட்டி போடுகின்றன.

அதன்படி பெங்களூர் அணி சென்னை அணியிடம் வெற்றி பெற்றதால், அவர் எஞிசியுள்ள 3 போட்டிகளில் 2 வெற்றி பெற்றால் உள்ளே சென்று விடலாம்.

ஆனால், மற்ற அணிகளான, டெல்லி, பஞ்சாப், அணியும் எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில், அந்த அணிகளும் வர அதிக வாய்ப்புள்ளது.

சென்னை அணிக்கு வாய்ப்பு உள்ளதா?

ரன் ரேட் அடிப்படையில் பார்த்தால், டெல்லி அணியும், ஹைதராபாத் அணியுமே நல்ல ரன்ரேட்டில் உள்ளது. இந்த 4 அணிகள் போட்டி போட்டு யார் வருவார்கள் என நினைத்திருந்தாலும், 5வது அணியாக சென்னைக்கு வாய்ப்பு உள்ளதா? என ரசிகர்கள் கேள்வியை எழுப்பிகின்றனர்.

அதன் அடிப்படையில் பார்த்தால் சென்னை அணி மொத்தமாக 10 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

மீதம் அவர்களுக்கு இன்னும் 4 போட்டிகள் உள்ளன. அந்த 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் சிஎஸ்கே 14 புள்ளிகளை பெற்றுவிடும்.

கடந்த சீசன் பொறுத்தவரை 7 வெற்றி பெற்று நல்ல ரன்ரேட்டும், 14 புள்ளிகள் இருந்தால் வாய்ப்பு இருந்தது. ஆனால், இந்தாண்டு 10 அணிகள் வந்ததால் 16 புள்ளிகள் குறைந்தபட்சம் தேவையாக உள்ளது.

போட்டி போடும் 5 அணிகள்

அதன்படி பார்த்தால் சிஎஸ்கேவுக்கு ரன் ரேட் அடிப்படையில் ஏதேனும் வாய்ப்புகள் கிடைத்தால் தான் உண்டு. ஆனால், அதற்கு மற்ற 4 அணிகளும் தோல்வியை சந்தித்து, சென்னை அணி அபார வெற்றி பதிவு செய்யும் பட்சத்தில், எதிர்ப்பார்க்கலாம்.

ஆனால், கொல்கத்தா அணியும் இருப்பதால், சென்னை அணிக்கு வாய்ப்பு என்பது சாத்தியம் இல்லாத ஒன்று.. மற்ற 5 அணிகளுக்கும் வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.

எனவே இந்த ஆண்டு சென்னை அணி இரண்டாவது அணியாக வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.