கனடாவில் ஒரு மருத்துவர் கூட இல்லாத தீவு?

0
666

கனடாவின் ஃபோகோ தீவு மக்கள் மருத்துவ சேவை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

சுமார் இருநூறு ஆண்டுகளில் முதல் தடவையாக தீவு மக்கள் மருத்துவரின் சேவையை முழுமையாக இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த தீவில் பணியாற்றி வரும் ஒரேயொரு முழு நேர மருத்துவர் ஜூன் மாதம் சேவையிலிருந்து விலகிக் கொள்கின்றார்.

ஃபோகோ தீவு மக்கள் மருத்துவரின் சேவையை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் ஆறு மணித்தியாலங்கள் ஆபத்தான படகுப் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.

பொருளாதார நெருக்கடி நிலைமைகள் மற்றும் சனத்தொகை பரம்பல் ஆகிய காரணிகளினால் நியூபவுன்ட்லான்ட்டின் பல நகரங்களில் இவ்வாறான அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

1792ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக ஃபோகோ தீவு மக்கள், வதிவிட மருத்துவர் ஒருவரின் சேவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நியூபவுன்ட்லான்டில் சுமார் ஒரு லட்சம் மக்களுக்கு குடும்ப மருத்துவர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.