தேயிலை தோட்டத்துக்குள் பாய்ந்த பேருந்து!

0
37

நெடுஞ்சாலையோரம் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் பாய்ந்து பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் 20 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உகாண்டாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள போர்ட் போர்டல் நகரில் இருந்து அந்த நாட்டின் தலைநகர் கம்பாலாவுக்கு பயணிகள் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.  

இந்த பேருந்து போர்ட் போர்டல் நகருக்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து சாலையில் தறிக்கெட்டு ஓடியது. பேருந்தில் இருந்த அனைவரும் பயத்தில் அலறி துடித்தனர். 

அதை தொடர்ந்து, நெடுஞ்சாலையோரம் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் பாய்ந்த பேருந்தில் பல முறை உருண்டு விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் உருக்குலைந்துபோனது. 

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர்.