எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீர் மின் துண்டிப்பு!

0
316
பண்டாரகம நகரத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த போது, திடீரென மின் துண்டிப்பு ஏற்பட்டதால் எரிபொருள் விநியோக நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஜெனரேட்டர்களும் செயலிழந்து காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஒரு கிலோமீற்றருக்கும் அதிக தூரத்திலிருந்து வாகனங்கள் வரிசையில் இருந்ததோடு, வாடிக்கையாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், பெற்றோர்களும் பிள்ளைகளை பாடசாலைக்கு கூட்டிச் செல்ல முடியாமல் வரிசையில் காத்திருந்தனர்.

இதனையடுத்து, சுமார் 2 மணிநேரத்திற்கு பின்னர் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது.