உலக ஊடக சுதந்திர சுட்டியில் இலங்கை 19வது இடம்!

0
626

2022ஆம் ஆண்டுக்கான உலக ஊடக சுதந்திர சுட்டியில், இலங்கை 19 இடங்கள் பின்னோக்கி தரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

நேற்று இடம்பெற்ற உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, 2022ஆம் ஆண்டுக்கான உலக ஊடக சுந்திர சுட்டியை வெளியிட்டுள்ளது.

180 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில், கடந்த ஆண்டு 127ஆவது இடத்தில் இலங்கை தரப்படுத்தப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 146 ஆவது இடத்தில் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த ஆண்டு 142 ஆவது இடத்தில் பதிவாகியிருந்த இந்தியா, இந்த ஆண்டு 150 ஆவது இடத்தில் பதிவாகியுள்ளது.

முதலாம் இடத்தில், நோர்வேயும், இரண்டாம் இடத்தில் டென்மார்க்கும் பதிவாகியுள்ள அதேசமயம் சுவீடன், எஸ்தோனியா, பின்லாந்து முதலான நாடுகள் முறையே அடுத்ததடுத்த இடங்களில் உள்ளன.

மேலும் பிரித்தானியா 24 ஆவது இடத்திலும், அமெரிக்க 42 ஆவது இடத்திலும், ரஷ்யா 155ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 157 ஆவது இடத்திலும், சீனா 175 ஆவது இடத்திலும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.