உக்ரைனியர்கள் மீது ரஷ்யா குற்றச்சாட்டு

0
652

உக்ரைனிலுள்ள பயன்பாட்டிலில்லாத இராணுவதளம் ஒன்றில் இருள் சக்திகளின் சாத்தான் முத்திரை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள ரஷ்யா, உக்ரைன் வீரர்கள் மந்திரவாதத்தைப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைனிலுள்ள Luhansk பகுதியில் அமைந்துள்ள Trekhizbenka என்ற கிராமத்தின் வெளியே இருக்கும் கைவிடப்பட்ட இராணுவதளம் ஒன்றில் ஒரு முத்திரை வரையப்பட்டுள்ளது.

இதுபோன்ற முத்திரைகளை இரத்தத்தால் வரையப்பட்டிருக்கலாம் என்றும், இது உக்ரைன் வீரர்கள் மந்திரவாதத்தைப் பயன்படுத்துவதைக் காட்டுவதாகவும் ரஷ்ய செய்தி ஏஜன்சி தெரிவித்துள்ளது.

இருள் உலகின் சக்திகளின் சீடர்கள், தங்கள் ஆயுதங்கள் எதிரியைத் தாக்கும்போது, கூடுதல் சேதத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக அவற்றிற்கு பூஜைகள் செய்யவும், இரத்தத்தால் அடையாளம் இடவும் முயன்றிருக்கலாம் என்றும் அந்த செய்தி ஏஜன்சி தெரிவித்துள்ளது.

அத்துடன், ரஷ்ய கலாச்சார நிபுணரான Ekaterina Dais என்பவர் கூறும்போது, அந்த அடையாளம் இருள் சக்திகளின் மாயாஜால அடையாளம் என்றும், அதை வரைந்தவர்கள், தங்கள் ஆயுதங்களின் வலிமை அதிகரிக்கவேண்டும் என்பதற்காகவோ, அல்லது அவற்றிற்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி கிடைக்கவேண்டும் என்பதற்காகவோ பூஜைகள் செய்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.