கோட்டாபய தொடர்பில் நாணயக்கார முடிவை அறிவித்தார்

0
168

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளார்.

அத்தோடு ஜனாதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை அர்த்தமற்றதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கட்சி பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவும் வாசுதேவ நாணயக்காரவின் கருத்தைப் போன்றே கருத்து வெளியிட்டிருந்தார்.

முன்னதாக தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்திருந்த வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதியின் கீழ் எந்தவொரு அமைச்சு பதவியும் ஏற்கமாட்டேன் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாசுதேவ நாணயக்கார தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனின் சம்பந்தி என்பது குறிப்பிடத்தக்கது.