இலங்கையை வந்தடைந்த வெளிநாட்டு பெற்றோல் கப்பல்!

0
608

இந்தியாவிலிருந்து மேலும் 40,000 மெற்றிக் தொன் பெற்றோல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலையில் அந்நாட்டிற்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இந்தியா இதுவரை 440,000 மெற்றிக் தொன் பெற்றோலை வழங்கியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்காலத்தில் அதிக எரிபொருள் வழங்கப்படும் எனவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது