பிள்ளையானின் சகாக்களால் அச்சத்தில் ஊடகவியலாளர்கள்!

0
501

ஊடகவியலாளர் மீது முகநூல் ஊடாக அச்சுறுத்தல் விடுத்தவர்கள் மீது பொலீஸ் மா அதிபரிடம் புகார் கொடுக்க கொழும்பு ஊடக அமைப்புக்கள் தீர்மானித்துள்ளன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் என கூறிக் கொண்டு முக நூலில் ஊடகவியலாளர்கள் சிலருக்கு அவர்களது குடும்ப படம் உட்பட தனிப்பட்ட விடயங்களை முகநூலில் போட்டு அவதூறு ஏற்படுத்தி இருந்தனர்.

அதோடு குறித்த ஊடகவியலாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் சமூகத்தின் மத்தியில் தவறான அபிப்ராயங்களை உருவாக்கி குறித்த ஊடகவியலாளர்களின் ஊடகப் பணிக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டனர் என்பதால் இதற்கு எதிராக இன்று கொழும்பில் உள்ள ஊடாக அமைப்புகளுடன் இணைந்து பொலீஸ் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்வதுடன் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளனர்.

இதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் இவர்கள் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் இவர்கள் குறித்த தங்களுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இவர்களுக்கும் எமது கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எனவே மேற்படி நபர்கள் அரசியல் அதிகாரம் என்று போர்வைக்குள் நின்று கொண்டு ஊடகவியலாளர்கள், மீதும் அவர்களது குடும்பங்கள் மீதும் சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை தற்போது தெரியவந்துள்ளது.

எனவே இவர்கள் மீது பொலீஸ் மா அதிபர் மற்றும் சைபர் கிரேம், மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியோரிடம் முறைப்பாடு செய்யப்பட உள்ளது. மேலும் இதற்கான ஆலோசனைகள் மற்றும் உதவிகளை கொழும்பில் உள்ள சட்டத்தரணிகள் சங்கத்திடம் ஊடக அமைப்புக்கள் கோரியுள்ளன.