பிரதம பீடாதிபதிகளை சந்தித்த Go Home Gota பிரதிநிதிகள்!

0
213

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘கோ ஹோம் கோட்டா ’ போராட்டத்தின் பிரதிநிதிகள் குழு கண்டியில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்துள்ளனர்.

இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக சங்க மாநாட்டு ஆணை பிறப்பிக்குமாறு பிரதிநிதிகள் பிரதம பீடாதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதோடு ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கௌரவப் பட்டங்களைத் திரும்பப் பெறுமாறும் பிரதம பீடாதிபதிகளிடம் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ராஜபக்ச குடும்பம் நடத்தும் அல்லது அவர்களுக்குத் தொடர்புடைய எந்த மத நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் பிரதம பீடாதிபதிகளிடம் அவர்கள் கோரிக்கைவிட்த்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.