பிரித்தானியாவில் கார் உற்பத்தி சரிவு

0
547

பிரித்தானியாவில் எரிசக்தி செலவுகளின் அதிகரிப்பால் கார் உற்பத்தி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக கூறப்படுகின்றது. விநியோகச் சங்கிலி பிரச்சினைகளுடன் உற்பத்தியாளர்கள் போராடுவதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பிரித்தானியாவில் கடந்த ஆண்டை விட 2022ஆம் ஆண்ட முதல் மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட 100,000 குறைவான கார்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் கருத்தின் படி, உற்பத்தி கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளதாக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கமானது, கணினி சிப்களின் உலகளாவிய பற்றாக்குறை மற்றும் உற்பத்தியாளர்களுக்கான எரிசக்தி செலவுகள் அதிகரிப்புடன் சரிவை இணைத்துள்ளது.

அதன்படி ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், பிரித்தானியாவில் மொத்தம் 207,347 புதிய கார்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டில் அதே மூன்று மாதங்களில் 306,558ஆகக் குறைந்துள்ளது, அப்போது தொற்றுநோய் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் அழுத்தங்களை உருவாக்கியது. அதோடு உற்பத்தியாளர்கள் தங்களுக்குத் தேவையான பாகங்களை, குறிப்பாக நவீன வாகனங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் செமிகண்டக்டர்கள் அல்லது கணினி சிப்ஸ்களைப் பெறுவதில் சிரமப்படுகிறார்கள்.

கடந்த ஆண்டு ஸ்விண்டனில் உள்ள ஹோண்டாவின் ஆலை மூடப்பட்டது ஒரு முக்கிய காரணியாக இருந்ததுடன், இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்களின் எண்ணிக்கையில் செங்குத்தான குறைப்புக்கு பங்களித்தது. கடந்த மாதம் அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் மிகப்பெரிய சரிவைக் கண்டது மற்றும் மார்ச் மாதத்தில் 63.8 சதவீதமாக குறைந்துள்ளது.

அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி 24.5 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் உக்ரைனில் நடக்கும் யுத்தம் உற்பத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், தொழிற்சாலைகள் வயரிங் அமைப்புகள் போன்ற பாகங்களைப் பெற்றுக்கொள்ள போராடுகின்றன. இதற்கிடையில், அதிகரித்து வரும் எரிசக்தி செலவினங்களின் தாக்கம் குறித்து கார் தயாரிப்பாளர்கள் கவலை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.