இரகசியமாக தந்தையான புடின்; அம்பலப்படுத்திய நபர்!

0
53

உக்ரைன் மீது படையெடுத்து உலகில்  3ம் உலகப்போருக்கான நிலையை தோற்றுவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் (Vladimir Putin)உடற்பயிற்சி வீராங்கனையான (Alina Kabaeva) தனது காதலி மூலம் இரகசியமாக இரு குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளதாக அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.

சுவிட்ஸர்லாந்தில் சொன்டக்ஸ்ஸெய்டங் பத்திரிக்கையால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு முலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) தன்னை விட மிகவும் வயது குறைந்தவரும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராக்கனையான அலினா கபேயவாவுடன் (Alina Kabaeva)  காதல் தொடர்பை கொண்டிருந்தார்.

இந்நிலையில் அலினாவின் (Alina Kabaeva) நண்பரும் மேற்படி இரு பிரசவங்களை பார்த்த மகப்பேறு மருத்துவரை அறிந்த ஒருவர் முலம் புட்டினுக்கும் (Vladimir Putin) , அலினாவுக்கும் (Alina Kabaeva)  இரு ஆண் குழந்தைகள் இரகசியமாக பிறந்தமை அம்பலமாகியுள்ளது.

அதன்படி முதலாவது ஆண் குழந்தை 2015ம் ஆண்டு சுவிட்ஸர்லாந்தில் இத்தாலிய மொழி பேசும் திசினோ பிராந்தியத்தில் உள்ள கிளினிக்கா சான்ட்அனா மருத்துவமனையில் கடும் பாதுகாப்பின் கீழ் இரகசியமாக பிறந்துள்ளது.

மேற்படி மருத்துவமனையானது சோவியத் ஒன்றிய காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிய புட்டின் (Vladimir Putin) நண்பர் ஒருவரால் நடத்தப்பட்டு வந்துள்ளது. அதேசமயம் புட்டினின் (Vladimir Putin) இரண்டாவது மகன் 2019ம் ஆண்டு மொஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அதே மகப்பேற்று மருத்துவ நிபுணரின் உதவியுடன் பிறந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை தற்போது 70 வயதான புட்டின் (Vladimir Putin) , 38 வயதான அலினாவுடன் (Alina Kabaeva)  தனக்கு இருப்பதாக கூறப்படும் காதல் தொடர்பை கடந்த 2007 ஆம் ஆண்டில் இருந்து மறுத்து வருகின்றார்.

அதேவேளை அலினாவுக்கும் புட்டினுக்கும் (Vladimir Putin) காதல் தொடர்பு இருப்பதாகவும் அலினாவுக்கு (Alina Kabaeva) புட்டினை (Vladimir Putin)  தவிர வேறு எவருடனும் தொடர்பு கிடையாது எனவும் இந்த இரகசியத்தை அம்பலப்படுத்திய நபர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.