பெற்றோல் கலன் தீப்பற்றி பாடசாலை மாணவி உயிரிழப்பு!

0
39

வீட்டு சுவாமி அறையில் விளக்கேற்றிய போது பெற்றோல் கலன் தீப்பற்றி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பகுதியில் இத்துயரச் சம்பவம் இன்று (02) திங்கட் கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மகாஜனா கல்லூரி மாணவியான பண்டத்தரிப்பை சேர்ந்த சுதர்சன் – சுதர்சிகா (வயது-17) என்ற மாணவியே இதன்போது உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெற்றோலை வாங்கி சேமித்து வைக்கும் நோக்கில் வீட்டு சுவாமி அறையில் பெற்றோல் நிரப்பப்பட்ட கலன் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மாலை வழக்கம் போல் சுதர்சிகா வீட்டு சுவாமி அறையில் விளக்கேற்றிவிட்டு தீக்குச்சியை கீழே போட்டுள்ளார்.

இதன்போது சுவாமி தட்டுக்கு கீழாக வைக்கப்பட்டிருந்த பெற்றோல் கலனில் கீழே விழுந்த தீக்குச்சி பட்டதும் தீப்பற்றி எரிந்தே இவ் அநர்த்தம் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.