புதிய பிரதமராக சஜித் இல்லை!

0
352

புதிய திட்டத்தின் கீழ் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவிற்கு வழங்க தான் உடன்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பதுளையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இடைக்கால அரசாங்கம் தொடர்பாக ஏற்றுக் கொள்ளக் கூடிய திட்டத்தை முன்வைத்தால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகத் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார்.

இந்த நிலையில் இடைக்கால அரசாங்கத்தில் புதிய பிரதமர் சஜித் என்றால் நான் ஆதரவு தெரிவிக்கமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.