ரஷ்யாவின் வான்வெளி அத்து மீறல்!

0
628

ரஷ்ய போர் விமானங்கள் தங்கள் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்து மிரட்டுவதாக ஸ்வீடன் தெரிவித்துள்ளது.

போர்ன்ஹோல்ம் தீவு அருகே பால்டிக் கடலில் இந்த அத்துமீறல் நடைபெற்றுள்ளது.

ஸ்வீடன் வான்வெளிக்குள் ரஷ்ய போர் விமானம் நுழைந்தவுடன், ஸ்வீடன் விமானப்படை விமானங்கள் அதைத் துரத்தியதாகவும் ரஷ்ய விமானத்தை புகைப்படம் எடுத்துள்ளதாகவும் ஸ்வீடன் பாதுகாப்பு மந்திரி பீட்டர் ஹல்ட்க்விஸ்ட் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் இந்த அத்துமீறல் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தொழில்முறைக்கு புறம்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இதுபோன்று நான்கு ரஷ்ய போர் விமானங்கள் பால்டிக் கடல் மீது பறந்தவாறு ஸ்வீடன் வான்வெளிக்குள் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைனுக்கு ஸ்வீடன் ஆயுத உதவிகளை வழங்கி வரும் நிலையில்,அதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.