மீண்டும் வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

0
33

நாட்டின் பல பகுதிகளில் பெற்றோல் நிலையங்களில் மீண்டும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றமையை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

குறிப்பாக மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதாகத் தெரிய வருகிறது.

எரிபொருள் பௌசர் உரிமையாளர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டமே இதற்குக் காரணமாகும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை சிலோன் பெற்றோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் அதிகரித்து வரும் எரிபொருள் விலைக்கு ஏற்ப போக்குவரத்து விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சனிக்கிழமை நள்ளிரவில் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தம் காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து போயுள்ள நிலையில், அவர்களின் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக லங்கா ஐஓசி தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கமும் எரிபொருள் விநியோகத்தில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.