சிகாகோவில் துப்பாக்கிச் சூடு சம்பவம்!

0
622

அமெரிக்காவின் சிகாகோ நகரில் கடந்த வார இறுதி நாட்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 8 பேர் கொல்லப்பட்டதுடன், 16 பேர் காயமடைந்தனர்.

கொல்லப்பட்டவர்களில் சிறுவன் ஒருவரும் அடங்குவதாக சிகாகோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிகாகோவின் தெற்கு கில்பேட்ரிக் பகுதியில் 69 வயது முதியவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் சுட்டு கொல்லப்பட்டார்.

பிரைட்டன் பூங்கா, தெற்கு இண்டியானா, வடக்கு கெத்ஜி அவென்யூ, ஹம்போல்ட் பூங்கா உள்ளிட்ட நகரங்களிலும் சனி, ஞாயிறு தினங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.

மிஸ்ஸிஸிப்பி நகரில் ஆண்டுதோறும் மட்பக்ஸ் என்ற பெயரில் உணவு திருவிழா நடைபெறும் நிலையில் சனிக்கிழமை விழா நடைபெறும் இடத்துக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார். 5 பேர் காயமடைந்தனர்.

விடுமுறை நாட்களில் அமெரிக்காவில் இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதனைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.